Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கொத்தட்டை டோல்கேட்டில் சுங்கக்கட்டணம் அதிரடி குறைப்பு!

விழுப்புரம்– நாகை தேசிய நெடுஞ்சாலையில், சிதம்பரம் அடுத்துள்ள கொள்ளிடம் ஆற்றின் அருகே சாலை உள்வாங்கியது. இச்சாலையை சீரமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, இச்சாலையில், சிதம்பரம் அடுத்துள்ள வேலக்குடியிலிருந்து போக்குவரத்து திருப்பிவிடப்பட்டு வல்லம்படுகை, கொள்ளிடம் வழியாக எருக்கூர் வரையில் சென்று, பழைய சாலையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.

இதனால், இச்சாலையில் 11 கி.மீட்டருக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்ட பகுதிக்கு ஏற்ப, கொத்தட்டை டோல்கேட்டில் கட்டணம் குறைக்கப்பட்டு, இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதில், இலகு ரக வாகனத்திற்கு ஒருமுறை கட்டணமாக இருந்த 135 என்பது 90 ரூபாயாகவும், திரும்ப வரும் கட்டணமாக, 200 வசூலிக்கப்பட்டது, 135 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் வாகனங்களின் தன்மைக்கு ஏற்ப கட்டணம் குறைந்த பட்சமாக 45 ரூபாய் முதல், அதிகபட்சமாக 410 ரூபாய் வரை டோல் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

சாலை சீரமைப்பு பணிகள் முடிவுற்று மீண்டும் நெடுஞ்சாலையில் போக்குவரத்து துவங்கப்படும் வரையில், குறைக்கப்பட்ட கட்டணம் அமலில் இருக்கும் என்றும், அதன் பிறகு மீண்டும் பழைய கட்டணம் வசூலிக்கப்படும் என நகாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!