நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள தேயிலை தோட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் உலா வரும் சிறுத்தை, ஆடு மற்றும் வளர்ப்பு நாய்களை வேட்டையாடி வருவதால் அப்பகுதி மக்களும் தொழிலாளர்களும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதை தொடர்ந்து, தொழிலாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பீதியை ஏற்படுத்தும் அச்சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
