திருச்சி அருகே உள்ள கல்லாத்துப்பட்டியை சேர்ந்த செல்வி (50) என்பவர், தனது சொந்த மகனான வெங்கடேசன் என்பவரால் உடற்பயிற்சிக்கு பயன்படும் ‘டம்பள்ஸ்’ கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, போலீசார் வெங்கடேசனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் போது, குடும்பத்தில் நீண்டநாட்களாக நிலவி வந்த சொத்து தகராறு காரணமாகவே ஆத்திரத்தில் தாயை அடித்து கொலை செய்ததாக வெங்கடேசன் போலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
