தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் லத்திபா (21). இவரது கணவர் முகம்மது முபாரக் இவர்களுக்கு கடந்து ஜூலை மாதம் 2025ம் ஆண்டு திருமணம் முடிந்து மூன்று மாத பெண் குழந்தை இருந்து வரும் நிலையில் கணவர் முபாரக் துபாய் நாட்டில் பணிபுரிந்து வருகிறார்.
உயிரிழந்த லத்தீபாவிற்கு திருச்சி காட்டூர் பகுதியை சேர்ந்த உமர் பாரூக் (24) என்ற அண்ணனும், 3 தங்கைகளும் இருந்து வருகின்றனர். லத்தீபா தனது குழந்தை மற்றும் மாமனார் மாமியாருடன் வசித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் உள்ள அறையில் மின்விசிறியில் திடீரென தூக்கில் தொங்கினார்..
இதை அடுத்து அக்கம் பக்கத்தினர் வீட்டின் அறை கதவை உடைத்து லத்தீபாவை மீட்டு

சிகிச்சைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக கூறினர்.
இது பற்றி தகவல் அறிந்த திருச்சி காட்டூர் பகுதியைச் சேர்ந்த லத்திபாவின் உறவினர்கள் அய்யம்பேட்டை வருகை புரிந்து லத்தீபா திருமணம் ஆகி வாழ்ந்து வந்த அவரது கணவர் முகம்மது முபாரக் வீட்டின் உள்ளே சென்று அங்கிருந்த இரண்டு சக்கர வாகனம், எல்இடிடிவி மற்றும் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வேன் கண்ணாடியை உடைத்து தகராறில் ஈடுபட்டனர்.
இதனால் அய்யம்பேட்டை வடக்கு மாங்குடி சாலை போர்க்களமாக மாறியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளர்கள் முருகவேலு, அய்யம்பேட்டை ஆய்வாளர் கவிதா, உதவி ஆய்வாளர் பைரன் மற்றும் காவலர்கள் லத்திபா உறவினர்களை சமாதானப்படுத்தினர்.
தொடர்ந்து உயிரிழந்த லத்தீபாவின் உடன் அய்யம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு நலன் கருதி தஞ்சையில் இருந்து ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 2 தரப்பினரும் மாறி மாறி மோதி கொண்டதால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
