சென்னை: காசோலை மோசடி வழக்கில் நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் செப்.10ம் நாள் நேரில் ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. ரூ.2 கோடி கடன் வாங்கியதற்காக சரத்குமார் அளித்த காசோலை பணம் இல்லாமல் திரும்ப வந்ததாக ஸ்ரீகிருஷ்ணா என்பவர் தொடர்ந்த மோசடி வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
