ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு 2022 – 23-ம் ஆண்டில் 25% ஊதிய உயர்வு மற்றும் 8.33% போனஸ் வழங்க சென்னை தொழில் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 2024 பிப்ரவரி மாதம் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய தலைவர் முருகன் உடனடியாக இந்த உத்தரவை அமல்படுத்த ஆணையிட்டுள்ளார். இதன் மூலம் EMRI கிரீன் ஹெல்த் சர்வீசஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 12,000 பேர் பயனடைவார்கள்.
