கடலூர் – புதுச்சேரி எல்லைப் பகுதியில் சென்று கொண்டிருந்த 31 வயதான சசிகுமார் என்பவரை மர்ம கும்பல் ஒன்று திடீரெனச் சூழ்ந்தது. அவர்கள் தங்களது கையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை சசிகுமார் மீது வீசித் தாக்குதல் நடத்தினர். வெடிகுண்டு பயங்கரச் சத்தத்துடன் வெடித்ததில் நிலைகுலைந்து விழுந்த சசிகுமாரை, அந்த கும்பல் அரிவாள் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் கொடூரமாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த சசிகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்தக் காவல் துறையினர், சசிகுமாரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக்கானக் காரணம் குறித்துப் போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
