இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 250 லோக்கல் பேங்க் ஆபிசர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரும் ஆக.24-க்குள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட 100 இடங்களுக்கு தமிழ் மொழி அறிவு கட்டாயமாகும்; ஆன்லைன் தேர்வு, மொழித்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் விபரங்களுக்கு: https://www.iob.bank.in/en/careers
