குஜராத்தின் கிர் வனப்பகுதியில் மட்டுமே வாழக்கூடிய ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை இந்தியாவில் 891 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அமைச்சர் பூபேந்தர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி 2020-ல் தொடங்கிய ‘பிராஜெக்ட் லயன்’ திட்டத்தின் நடவடிக்கைகளால், சிங்கங்களின் வாழ்விட பரப்பு 30,000 சதுர கி.மீ-யில் இருந்து 35,000 சதுர கி.மீ ஆக விரிவடைந்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டில் 523 ஆக இருந்த ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை, அரசின் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக தற்போது 891 ஆக கணிசமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
