பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார். மேலும், தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்ட 6 இலவச சிலிண்டர்கள் வழங்கும் திட்டமும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என அவர் விமர்சித்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், ஆட்சி அமைத்த 3 மாதங்களிலேயே அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியாது என்றும், 5 ஆண்டுகளுக்குள் அனைத்து வாக்குறுதிகளும் கட்டாயம் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
