Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உலக யானைகள் தினம்… உலகம் முழுவதும் வாழும் 4.65 லட்சம் யானைகள்

யானைகள் தினம்-உலகம் முழுவதும் வாழும் 4.65 லட்சம் யானைகள்

இன்று (ஆகஸ்ட் 12) உலக யானைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. நிலப்பரப்பில் வாழும் மிகப்பெரிய பாலூட்டியான யானைகளைப் பாதுகாக்கவும், அவற்றின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை உலகளவில் ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12-ம் தேதி உலக யானைகள் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தற்போது உலகம் முழுவதும் சுமார் 4.65 லட்சம் யானைகள் மட்டுமே வாழ்கின்றன. மனிதர்களின் ஆக்கிரமிப்புகளால் வனப்பரப்பு தொடர்ந்து குறைந்து வருவது, யானைகளுக்கான உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை, பருவநிலை மாற்றம் ஆகியவை யானைகளின் எண்ணிக்கை வேகமாகச் சரிவதற்குக் காரணங்களாக அமைகின்றன. இதனால் மனிதன் – யானை மோதல்கள் அதிகரித்து வருகின்றன.

இயற்கைச் சூழல் மண்டலத்தில் யானைகள் ‘காட்டின் பொறியாளர்கள்’ (Ecosystem Engineers) என அழைக்கப்படுகின்றன. அவை நடக்கும் பாதைகள் காடுகளின் தாவர வளர்ச்சிக்கும், பிற விலங்கினங்களின் வாழ்விற்கும் வழிவகுக்கின்றன. எனினும், மனிதர்களின் சுயநலக் காரணங்களாலும், உணவு மற்றும் நீர்நிலைகள் சுருங்குவதாலும் யானை இனம் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறது. யானைகளைப் பாதுகாக்கவும், அவற்றுக்கானப் பாரம்பரியக் வழித்தடங்களை (Elephant Corridors) மீட்டெடுக்கவும் வனத்துறையும் சுற்றுச்சூழல் அமைப்புகளும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இன்று மேற்கொண்டு வருகின்றன.

error: Content is protected !!