அதிராம்பட்டினம் வீரனார் கோவில் தெரு அருள்மிகு ஸ்ரீ வீரனார் ஆலய ஐந்தாம் ஆண்டு ஆடி திருவிழா தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் வீரனார் கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு வீரனார் கோவில் வளாகத்தில் காத்தாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஐம்பொன் சிலை புதிதாக கும்பகோணம் பகுதியில் உள்ள

நாச்சியார் கோவில் ஊரில் செய்யப்பட்டு இந்த சிலை அதிராம்பட்டினத்திற்கு கொண்டு பிள்ளைமார் தெரு அச்சம் தீர்த்த விநாயகர் கோவிலில் வைக்கப்பட்டு அங்கிருந்து பால் குடங்கள் சீர் தட்டுகள் பெண்கள் மற்றும் பக்தர்கள் ஊர்வலமாக வான வேடிக்கை மேளத்தாலங்குடன் 2 தெருக்கள் வழியாக திருக்கோவிலை அடைந்தது பின்னர் காத்தாய்

அம்மனுக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டு தீப ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வீரனாருக்கு பால் பாளையம் போட்டு தீபாராதனை நடைபெற்றது. அதன்பின் மின்னடையான் சாமிக்கு கிடா வெட்டும் பூஜை நடைபெற்றது. இத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
