விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் உள்ள கிருஷ்ணா பட்டாசு ஆலையில் இன்று (ஆக.13) திடீரென விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆலையில் பணியாற்றிய 3 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து-3 தொழிலாளர்கள் பலி
