கரூரில் 31 பேருக்கு அரசுப்பணி வழங்கியதை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கரூரில் தவெக கட்சி கூட்ட நெரிசலில் சிக்கி கடந்த ஆண்டு 41 பேர் உயிரிழந்தனர். இதில் 31 பேரின் குடும்பங்களுக்கு கடந்த மாதம் அரசுப்பணி ஆணை வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அரசாணையை நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்த நிலையில், அந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
