Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் போதைப்பொருள் ஒழிப்பு மனித சங்கிலி விழிப்புணர்வு

கரூரில் போதைப்பொருள் ஒழிப்பு மனித சங்கிலி விழிப்புணர்வு

கரூர் தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில் செயல்பட்டு வரும் போதை ஒழிப்பு மன்றம் சார்பில், தமிழகத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றும் நோக்கில் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்த பிரம்மாண்ட மனித சங்கிலியில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், “போதைப்பொருள் வாழ்வை அழிக்கும்”, “போதை வேண்டாம்… பாதை மாறு” உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய

பதாகைகளை ஏந்தியபடி மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர். போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.

error: Content is protected !!