FSSAI அறிவுறுத்தல் படி தமிழகத்தில் 11 மது வகைகளை விற்பனை செய்ய தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
11 மது வகைகளில் இயற்கையான சுவையை ஒத்த மற்றும் செயற்கையான சுவையூட்டும் பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, FSSAI-யின் உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், குறிப்பிட்ட தயாரிப்புகளின் விற்பனையை நிறுத்துமாறும், மேலும் ‘M/s Enrica Enterprises Private Limited’-ன் தயாரிப்புகளை நுகர்வோருக்கு விற்பனை செய்யக்கூடாது என்று விநியோகஸ்தர்கள்/மொத்த விற்பனையாளர்கள்/சில்லறை விற்பனையாளர்களுக்குத் தகுந்த அறிவுறுத்தல்களை வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
‘M/s Enrica Enterprises Private Limited’-ன் 11 பிராண்டுகளை டிப்போவிலிருந்து RV கடைகளுக்கு இடமாற்றம் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும். ‘M/s Enrica Enterprises Private Limited’-ன் மேற்கூறிய 11 பிராண்டுகளை FL2 மற்றும் FL3 உரிமம் பெற்றவர்களுக்கு விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும். அடுத்த உத்தரவு வரும் வரை, RV கடைகளில் ‘M/s Enrica Enterprises Private Limited’-ன் 11 பிராண்டுகளை விற்பனை செய்யக்கூடாது.
தடை செய்யப்பட்ட மது வகைகள்
- LOUIS VERNANT XO BLENDED PREMIUM BRANDY
- Mc Dowells VSOP Brandy (Blended Brandy)
- NO.1 McDowells Fine Brandy (Indian Brandy)
- MENSCLUB Deluxe Brandy (Indian Brandy)
- HONEY BEE FINE Brandy (Indian Brandy)
- ENRICA VSOP SELECT BRANDY
- ENRICA PLATINUM RESERVE XO BRANDY
- ENRICA PREMIUM FRENCH BRANDY
- VEERAN SPECIAL BRANDY
- ENRICA OLD INDIE CLASSIC DARK RUM
