Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் வினோத் திடீர் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், வேளாண்துறை அமைச்சர் வினோத் திடீரென ஆய்வு மேற்கொண்டார். இதன் போது, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உரிய நேரத்திற்கு பணிக்கு வருகிறார்களா என்பதையும், நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ சேவைகள் தடையின்றி கிடைக்கின்றனவா என்பதையும் அவர் ஆய்வு செய்தார். மேலும், நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகளின் தரம் மற்றும் இருப்பு வைக்கப்பட்டுள்ள மருந்துகளின் விவரங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

error: Content is protected !!