கோவையில் கொல்லப்பட்ட கல்லூரி மாணவர் அமுதனின் பெற்றோரை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார். இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தர சட்ட ரீதியாக போராட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். மேலும், வரும் 17-ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் இம்மாணவர் படுகொலை சம்பவம் குறித்து பேச உள்ளதாக தெரிவித்துள்ளதாக அமுதனின் பெற்றோர் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.
கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி போனில் ஆறுதல்
