பெங்களூரு: கே.ஆர்.எஸ். அணையில் இருந்து கர்நாடக அரசு, விநாடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் திறந்துள்ளது. கபினியில் சுமார் 12,000 கனஅடி நீர் திறக்கப்படும் நிலையில், தற்போது கே.ஆர்.எஸ்.ல் 3,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி, கே.ஆர்.எஸ்.அணைகளில் இருந்து காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டுக்கு 15,000 கனஅடி நீர் வர உள்ளது.
காவிரி நீரை உடனடியாக விடுவிக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி, தமிழக அரசு மற்றும் திமுக உள்ளிட்ட பிறர் தாக்கல் செய்த மனுக்கள், வரும் ஆகஸ்ட் 17ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நாளை மறுநாள் காவிரி தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் கர்நாடக அரசு தற்போது கூடுதல் காவிரி நீரை திறந்துள்ளது.
