எரிசக்தி பாதுகாப்பே நாட்டின் இப்போதைய தேவை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். பல சவால்களை தாண்டி மக்களுக்கே முக்கியத்துவம் அரசு தருகிறது. 1.75 கோடி பேர் குழாய் வழியாக எரிவாயு இணைப்பு பெற்றுள்ளனர். நமது திறமை உலகம் முழுவதும் அறியப்படுகிறது. நமது தேவைகளுக்காக மற்ற நாடுகளை சார்ந்திருக்க கூடாது. 40 நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் மீனவர்கள், விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
