சுதந்திர தினத்தை முன்னிட்டு தஞ்சையில் நடந்த போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் தனியார் நிறுவன ஊழியர்கள் சுமார் 800 பேர் 110 மீட்டர் நீளம் உள்ள தேசியக் கொடியினை கைகளில் ஏந்தி சென்றனர்.
80ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. தஞ்சை மெஜஸ்டிக் மகாராஜா குழுமம் சார்பில் நடந்த பேரணியில், அந்த நிறுவனத்தில்

பணியாற்றி வரும் ஊழியர்கள் சுமார் 800 பேர் தஞ்சை தலைமை தபால் நிலையத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய சாலைகள் வழியாக சென்று மஹாராஜா நிறுவனத்தில் நிறைவடைந்தனர்.
பேரணியில் 110 மீட்டர் நீளம் கொண்ட தேசியக் கொடியினை கைகளில் ஏந்தி சென்றனர்.
