Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் குப்பை தொட்டிகளுக்கு மத்தியில் மகாத்மா காந்தி சிலை- அவலம்

கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் குப்பை தொட்டிகளுக்கு மத்தியில் கேட்பாரின்றி இருக்கும் மகாத்மா காந்தி சிலை – ஆகஸ்ட் 15-ல் சுதந்திரம் பெற்றுத் தந்த தேசப்பிதாவின் அவல நிலை.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கரூர் எம்.பி. ஜோதிமணி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதன் தொடர்ச்சியாக அங்கிருந்து அகற்றப்பட்ட காந்தி சிலை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டது.

லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதியில் அகற்றப்பட்ட காந்தி சிலையை பராமரிக்க வேண்டும் என்று கடந்த ஐந்து ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கைகளும் எழுந்தன. இந்நிலையில் இன்று 80-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நாளை ஒட்டி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கவிதா மற்றும் ஆணையர் பிரித்திவிராஜ் தலைமையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டது. மேலும், மாநகராட்சி அலுவலகம் அருகில் அமைந்துள்ள ஆசாத் பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அதேநேரம் சுதந்திரத்திற்காக பெறும் பங்காற்றிய நாட்டு மக்களால் தேசப்பிதா என்று போற்றப்படும் காந்தியடிகளின் சிலை மாநகராட்சி அலுவலகத்தில் குப்பை தொட்டிகளுக்கு மத்தியில் பராமரிப்பு இன்றி இருக்கும் அவல நிலை தொடர்கதையாக இருந்து வருகிறது. காந்தியடிகள் சிலையை பராமரிக்க வேண்டும் என்று தற்போது மீண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.

error: Content is protected !!