திருவண்ணாமலை மாவட்டம் தேவரெட்டியார்குப்பத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வீரமணி (45), கடந்த 2021-ம் ஆண்டு 13 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, வீரமணிக்கு சாகும்வரை சிறை தண்டனையும் ரூ.20,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
