Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் கருகிய வாழை பயிர்களுடன் விவசாயிகள் போராட்டம்

திருச்சியில் கருகிய வாழை பயிர்களுடன் விவசாயிகள் போராட்டம்

மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி, கருகிய வாழை பயிர்களுடன், திருச்சி ஆட்சியரகம் முன்பு விவசாயிகள் போராட்டம்.

திருச்சி மாவட்டத்தின் 17 கிளை வாய்க்கால்களின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும், கால்நடை மற்றும் பொது மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க வழிவகை செய்யவும் மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும். மேலும் அந்த நல்லூர் வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதால் வாழை பயிர்கள் கருகி நாசமாகி உள்ளது. எனவே உடனடியாக மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக நீர் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில், வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ₹.1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கருகிய வாழை பயிர்களை கையில் ஏந்தியபடி போராட்டம் நடைபெற்றது. மாநில பொருளாளர் அயிலை சிவசூரியன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அந்தநல்லூர் வட்டார விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து போலீசாரின் பேச்சு வார்த்தைக்கு பின்னர் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்து சென்றனர்.

error: Content is protected !!