தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வந்த டெங்கு ஒழிப்பு தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன பணி நிறுத்தப்பட்டது குறித்து பாதிக்கப்பட்ட பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் முத்துகுமரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில்….
கரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் தினக்கூலி அடிப்படையில் ஊதியம் பெற்று டெங்கு ஒழிப்பு பணியாளராக 160 க்கு மேற்பட்டோர் 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தோம்.
160 பேருக்கும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் பணியில் இருந்து நிறுத்தப்பட்டு விட்டோம். இதனால் பொதுமக்களின் நலன் பாதிக்கப்படுவதுடன் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் வேலை இல்லாததால் வருமான இழப்பை ஏற்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட ஆட்சியர் இது குறித்து உரிய விசாரணை நடத்தி டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்ட தினக்கூலி பணியாளர்களால் எங்களுக்கு மீண்டும் பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
