Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

10 கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூடல்-தொழிலாளர்கள் வேதனை

10 கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூடல்-தொழிலாளர்கள் வேதனை

வருவாயை காரணம் காட்டி 10 கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. இதுதான் தவெக அரசின் 100 நாள் சாதனையா? என தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கமான கோ-ஆப்டெக்ஸ் (Co-optex) நிறுவனம், நெசவாளர்களின் கைத்தறிப் பொருட்களை விற்பனை செய்ய இந்தியா முழுவதும் சுமார் 146-க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களை உள்ளது.தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் பாரம்பரிய கைத்தறி ஆடைகளை வாங்குவதற்கு ஏதுவாக கோ-ஆப்டெக்ஸ் கிளைகள் உள்ளன. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் ஆன நிலையில் வருவாயை காரணம் காட்டி ஆந்திராவில் 5 விற்பனை நிலையங்களையும், தமிழகத்தில் நான்கு விற்பனை நிலையங்களையும், கோவாவில் ஒரு விற்பனை நிலையங்களையும் இம்மாதம் இறுதிக்குள் மூடுவதற்கு கோஆப்டெக்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தமிழகம், ஆந்​தி​ரா, கோவா ஆகிய மாநிலங்​களில் உள்ள 10 கோ-ஆப்​டெக்ஸ் விற்​பனை நிலை​யங்​களை அடுத்​தடுத்து மூட தமிழ்​நாடு அரசின் கைத்​தறித் துறை முடி​வு செய்துள்ளதற்கு கோ-ஆப்​டெக்ஸ் ஊழியர்​கள் சங்​கம் கண்​டனம் தெரி​வித்​துள்​ளது. கோ-ஆப்​டெக்ஸ் கடைகள் தமிழகம், டெல்​லி, மகா​ராஷ்டிரா உட்பட 15 மாநிலங்​களில் இயங்கி வரு​வது குறிப்பிடதக்கது.

error: Content is protected !!