பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.2 லட்சம் ஆன்லைன் மோசடி..
திருச்சி கே கே நகர் அஞ்சுகம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் அவரது மனைவி பத்மாவதி ( 30) இவரது வங்கிக் கணக்கு வரவு செலவுகளை
அவரது கணவர் பராமரித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 13 – ந் தேதி அவரது செல்போனுக்கு வாட்ஸ்-அப் லிங்க் ஒன்று வந்தது. அதில் வட்டார போக்குவரத்து அலுவலகப் பெயரில் பத்மாவதியின் வாகனத்துக்கு அபராத தொகை பாக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது அதைத் தொடர்ந்து வினோத்குமார் அந்த லிங்கை கிளிக் செய்து அதில் தனது வங்கி கணக்கு விவரங்களை தெரிவித்தார். அடுத்த நொடியே பத்மாவதியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 99 ஆயிரம் பணம் திருடப்பட்டது. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து கொண்ட பத்மாவதி இது பற்றிய உடனடியாக ஆன்லைன் வாயிலாக மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார் இன்ஸ்பெக்டர் பாலுசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஆட்டோவில் கஞ்சா கடத்திய ரவுடி
திருச்சி மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் திருச்சி கே கே நகர் உடையான் பட்டி ரயில்வே கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது சந்தேகத்துக்கிடமாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர் அப்போது அதில் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது அதைத் தொடர்ந்து ஆட்டோவை ஓட்டி வந்த எடமலைப்பட்டிபுதூர் கொல்லங்குளம் பாரதியார் நகர் பகுதியைச் சேர்ந்த அப்புச்சி என்கிற அபுதாஹிர் (வயது 38) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர் அப்போது அப்புச்சி ஆட்டோவை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார் போலீசார் அவரை துரத்தி சென்றனர் ஆனால் அவர் மின்னலாய் மறைந்து விட்டார் பின்னர் போலீசார் ஆட்டோ மற்றும் கஞ்சாவை கைப்பற்றி அப்புச்சி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இவர் ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குடி போதையில் வாலிபரை அறிவாளால் தாக்கிய ரவுடி
திருச்சி எடமலைப்பட்டி புதூர் அரசு காலணி ஆறாவது தெரு பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 34) இவர் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார் அப்போது எடமலைப்பட்டி புதூர் கொல்லங்குளம் பாரதியார் நகர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி அப்புச்சி என்கிற அபுதாஹிர் 38 என்பவர் குடிபோதையில் அவரிடம் சண்டை போட்டு அவரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றார் பாதிக்கப்பட்ட பிரபுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் இது பற்றி பிரபு கொடுத்த புகாரின் அடிப்படையில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்புச்சியை தேடி வருகின்றனர்.
ஏசி காப்பர் வயர் திருடிய வாலிபர் சிக்கினார்
திருச்சி பீமநகர் யானை கட்டி மைதானம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாஹிர் அகமது (வயது 61.) இவரது வீட்டின் ஏசி காப்பர் வயரை பாலக்கரை கூனி பஜார் பகவதி அம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த ரவீந்திரன் ( 19 ) என்பவர் திருடி கொண்டிருந்தார் இதை பார்த்த ஜாகிர் அகமது அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை கையும் களவுமாக பிடித்து செசன்ஸ் கோர்ட் போலீசில் ஒப்படைத்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மினி டெம்போ திருடிய வாலிபர் கைது
திருச்சி ஜீயபுரம் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் வயது 45 இவர் தனது டாடா ஏசி வாகனத்தில் காய்கறி வாங்குவதற்காக திருச்சி காந்தி மார்க்கெட் சென்டர் பின்னர் காந்தி மார்க்கெட் வெள்ள மண்டி பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு மார்க்கத்துக்கு சென்றார் பின்னர் காய்கறிகள் வாங்கிக் கொண்டு திரும்பிய போது மினி டெம்போவை காணவில்லை மறுமை நபர்கள் சீரடி சென்று விட்டனர் பின்னர் இது பற்றி சுந்தர்ராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அந்த வாகனத்தை திருடி சென்ற கரூர் இரணியமங்கலம் வலையப்பட்டி குடித்தெரு பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்கிற ரமேஷ் 32 என்பவரை கைது செய்து அந்த வாகனத்தை மீட்டனர்.
விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை
திருச்சி மேல சிந்தாமணி பழைய கரூர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் இவரது மனைவி லட்சுமி வயது என்பது இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் ஆகியோர் உள்ளனர் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது இந்த நிலையில் லட்சுமியின் சகோதரர் ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார் இதனால் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளான லட்சுமி யாரும் எதிர்பாராத வகையில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார் உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்தபோதிலும் சிகிச்சை பல நிலைக்காமல் லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து அவரது மகள் செல்வி கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
