இந்திய விமானப்படையின் 2016-ம் ஆண்டு முதல் பெண் போர் விமானிகள் குழுவில் இணைந்த பாவனா காந்த், பகல் நேர போர் நடவடிக்கைகளுக்கு தகுதி பெற்ற முதல் பெண் விமானி என்ற பெருமையை பெற்றவர். குடியரசு தின அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரலாற்று சாதனை படைத்த இவர், மதிப்புமிக்க ‘போர் விமான படைத் தலைவர்’ பயிற்சியை முடித்துள்ளார். அமெரிக்க கடற்படையின் “டாப் கன்” திட்டத்திற்கு இணையான இந்த பயிற்சியை நிறைவு செய்ததன் மூலம் இந்தியாவின் முதல் பெண் ‘டாப் கன்’ விமானியாக உருவெடுத்துள்ளார்.
இந்திய வான்படையில் முத்திரை பதித்த பாவனா காந்த்
