கோவை சஹோதயா பள்ளிகள் கூட்டமைப்பின் சார்பில், 10-வது ஆண்டு தடகளப் போட்டி கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இப்போட்டிகளில் கலந்துகொண் டனர். இதில் 12, 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

