போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கேரளா மாநிலத்திலிருந்து சைக்கிளில் ஒற்றை சக்கரத்தை மட்டும் பயன்படுத்தி வலம் வரும் கேரளா மாநில பட்டதாரி இளைஞர்.
.கேரளா மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த சனித்(25). இவர் சிவில் இன்ஜினியரிங் முடித்து பணி செய்து வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி கேரளா மாநிலம் கண்ணூரிலிருந்து புறப்பட்டு இமய மலைக்கு சைக்கிளில் ஒற்றை சக்கரத்தை மட்டும் பயன்படுத்தி பயணம்

செய்து வருகிறார். சைக்கிளில் முன் சக்கரம் இல்லாமல் பின் சக்கரம் மட்டும் பயன்படுத்தி வலம் வரும் இவர் கோவை, பழனி, ராமேஸ்வரம், தனுஷ்கோடி, திருச்சி, தஞ்சை மற்றும் கும்பகோணம், பாண்டிச்சேரி, சென்னை, ஆந்திரா வழியாக பல்வேறு வட மாநிலங்களை கடந்து இமயமலை செல்கிறார். கேரளா மாநிலத்திலிருந்து இமயமலை செல்வதற்கு ஒரு வருடம் ஆகும்

என தெரிவித்தார்.
இதுகுறித்து இளைஞர் சனித் கூறுகையில்….
போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வுக்காக தான் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டு வருகிறேன். கடந்த 2023-24 ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் எனது பயணத்தை முடித்தேன். அதேபோல் இந்த ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி கேரளா மாநிலமான தனது சொந்த ஊரிலிருந்து சைக்கிள் பயணத்தை தொடங்கியுள்ளேன். சைக்கிளில் ஒற்றை சக்கரத்தை பயன்படுத்தி பயணம் செய்து வருகிறேன். தமிழகத்தில் போதை பொருள் விழிப்புணர்வு குறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. போதை பொருள் விழிப்புணர்வு குறித்து நான் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு உலக சாதனை படைக்க உள்ளேன். என்னால் ஒருவர் போதை பழக்கத்தில் இருந்து மீண்டாலே அது தான் எனக்கு சாதனை. நான் வேலை பார்த்த பணத்தை வைத்துக் கொண்டு பயணத்தை தொடங்கினேன். செல்லும் வழியில் எனது நண்பர்களும் சிறு உதவிகளை செய்து வருகின்றனர். இந்த பயணம் முடிவடைய ஒரு வருட காலம் ஆகும் என்று அவர் கூறினார். இந்நிலையில் தஞ்சை வந்த அவருக்கு தஞ்சை பெரிய கோயில் முன்பு பொதுமக்கள், வணிகர்கள் என அவரை வரவேற்று உற்சாகப்படுத்தினர்.
