மேகமலை புலிகள் காப்பகப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் எக்காரணம் கொண்டும் யாருக்கும் பட்டா வழங்கக் கூடாது” எனக் காட்டமாக தெரிவித்துள்ளது. ‘மேகமலை பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இலவம்பஞ்சு தோட்டங்களை முழுமையாக அகற்ற வேண்டும்’ என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால், துணை ராணுவப் படையை அனுப்ப வேண்டிய நிலை ஏற்படும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
