Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தவெக பிரமுகர் மீது பொய் வழக்கா?கரூரில் மனைவி புகார் மனு!

கரூர் அருகே செயின் பறிப்பில் கைதான தவெக பிரமுகர்: திட்டமிட்டு பொய் வழக்கில் சிக்க வைத்துள்ளதாகக் கூறி, அவரது மனைவி தேவயானி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு.

கரூர் மாவட்டம், புகழூர் தாலுகா, மூலிமங்கலம் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் நந்தகுமார் (29). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான இவர், விஜய் மக்கள் இயக்கத்திலும், தற்போது தமிழக வெற்றி கழகத்தில் நகரச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்துள்ளார்.

கடந்த 15ஆம் தேதி வேலாயுதம்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக கூறி நந்தகுமாரை போலீசார் கைது செய்து இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், நந்தகுமாரின் மனைவி தேவயானி, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனுவில் கூறியுள்ளதாவது:

“நாங்கள் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். என் கணவர் கட்சிப் பொறுப்பில் சிறப்பாகச் செயல்பட்டு வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர், ‘பணத்தைப் பெற்றுக்கொண்டு பொறுப்பிலிருந்து விலகிவிடு’ என்று பலமுறை மிரட்டல் விடுத்துள்ளதாகவும். ஆனால் என் கணவர் அதற்குச் சம்மதிக்கவில்லை.”
“இதனால் ஆத்திரமடைந்த சிலர், திட்டமிட்டே ஒரு குற்றப் பிரச்சினையில் என் கணவரைச் சிக்க வைத்ததாகவும்.

மேலும், காவல்துறையினரும் மற்றும் காவல் ஆய்வாளரும் ‘நீதான் இந்தக் குற்றத்தைச் செய்தாய்’ என்று ஒத்துக்கொள்ளுமாறு மிரட்டி, அச்சுறுத்தி ஒப்புக்கொள்ள வைத்துள்ளதாகவும்.

சட்டப் போராட்டம் நடத்துவதற்கான வழிமுறைகளோ? பண வசதியோ இல்லை வேண்டுமென்றே இந்த பிரச்சனையில் மேல் ஜாதியினர் சிக்க வைத்ததாகவும் இந்த குற்றத்திற்கும் என் கணவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் நிரபராதியான என் கணவரை மீட்டுக் கொடுக்கக் வேண்டுமென்று புகார் மனுவில் குறிப்பிட்டது.

மேலும் இது சம்பந்தமாக தவெக மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு உதவியும் செய்யவில்லை எனவும், உண்மை தன்மையைக் கூட விசாரிக்கவில்லை, கட்சிக்காக உழைத்தவருக்கு இந்த ஒரு நிலை வந்துள்ளதாகவும், சாதி பாகுபாட்டால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மனித உரிமை ஆணையத்தை நாட உள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் பேட்டி.

error: Content is protected !!