தமிழக சட்டப்பேரவையில் மின்கட்டண உயர்வு மற்றும் மின்கணக்கீடு தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விரக்தி குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது, மின்கட்டண உயர்வு மற்றும் மின்கணக்கீடு தொடர்பான மக்கள் பிரச்னைகள் குறித்து அரசின் கவனத்தை ஈர்ப்பதாக தெரிவித்தார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், “சம்பந்தப்பட்ட அமைச்சர் பேரவை வராத நிலையில், அவரிடம் இருந்து உரிய பதில் வந்ததும், அது குறித்து பதில் அளிக்கப்படும்” என தெரிவித்தார்.
