உச்ச நீதிமன்றமும் காவிரி நீர் ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டம் தமிழகத்திற்கு மாதம் தோறும் வழங்க வேண்டிய காவிரிநீரை கர்நாடக அரசு தர மறுத்துவருகிறது. நடப்பாண்டு குறுவைசாகுபடியும் பொய்த்துவிட்டநிலையில், விவசாயிகளின் நிலையறிந்து தண்ணீரை பெற்றுதரவேண்டிய தமிழக அரசிடமும் விவசாயிகள் பலமுறை வலியுறுத்தி வருகின்றனர்.
ஆட்சியாளர்களிடம் கோரிக்கை வைத்து பலனில்லை என்பதால், கடவுளாக கருணைபுரியட்டும் என்று முழுமுதற் கடவுளான மலைக்கோட்டை மாணிக்கவிநாயகரிடம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் காவிரிநீர் கேட்டு கோரிக்கைமனு அளித்து வழிபாடு மேற்கொண்டனர். தமிழக முதலமைச்சர் கடந்த 3ம் தேதி கர்நாடகா செல்ல முயன்றபோது இங்குவராதீர்கள் தண்ணீர் இல்லை என்கிறார்கள், மறு தினமே 20000 கன அடி தண்ணீர் வந்தபோது தேக்கி வைக்க முடியாமல் தமிழகத்திற்கு திருப்பி விடுகிறார்கள்
தமிழகத்தை வடிகால் மாநிலமாக என்னும் கர்நாடகாவை கண்டித்து ஜனாதிபதியிடம் மனு அளிக்க உள்ளோம், ஜனாதிபதியிடம் மனு அளித்தால் மட்டும் போதாது கணபதியின் அருள் வேண்டும் என்பதால், ஸ்ரீரங்கம் கோவிலை கட்டுவதற்கு கருணை காட்டியவர் விநாயகர் என்பதால், தமிழக விவசாயிகளை காப்பாற்றுங்கள் தமிழகத்திற்கு நஷ்ட ஈடு வாங்கிக் கொடுங்கள் என்று மனு அளித்ததாகவும் அய்யாகண்ணு தெரிவித்தார்.
நமது முதல்வர் கர்நாடகா வரக்கூடாது என்று கூறியவர், எதற்காக தமிழகம் வர வேண்டும்?

தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை எதிர்க்க மாட்டோம் என்ற எண்ணத்தில் தான் இங்கு வருகிறார். அங்கு உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து தண்ணீர் தர மறுக்கிறார்கள், ஆனால் இங்குஉள்ளவர்கள் ஒன்றுசேர்ந்து தண்ணீர் கேட்பதில்லை… மாறாக காவல்துறையை வைத்து விவசாயிகளை மிரட்டுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார் .இந்நிகழ்வில் மாநிலத் துணைத் தலைவர் மேகராஜன் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
