Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை…போக்சோவில் டிரைவர் கைது

10th மாணவிக்கு பாலியல் தொல்லை... முதியவர் கைது

விழுப்புரம் அருகே உள்ள காணை இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜன் மகன் அந்தோணிராஜ் (வயது 26), சரக்கு வாகன டிரைவர். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு கிராமத்தை சேர்ந்த 5-ம் வகுப்பு படிக்கும் 9 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுபற்றி அந்த மாணவி, அழுதுகொண்டே வந்து தனது பெற்றோரிடம் கூறினாள்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தோணி ராஜை கைது செய்தனர். பின்னர் அவரை, விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேடம்பட்டில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் அடைத்தனர். இவர் மீது கடந்த 2023-ல் ஏற்கனவே ஒரு போக்சோ வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!