Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எங்களுக்கு கார் வேண்டாம்” – 59 திமுக எம்எல்ஏக்கள் முடிவு!

திமுக எம்எல்ஏக்கள் 59 பேர் கார் பெறுவதில்லை என கூறியுள்ளனர். பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உறுப்பினர்களுக்கு மட்டும் கார் வழங்கினால் போதும். அரசின் நிதிநிலைமையை கருத்தில் கொண்டு கார் பெறுவதில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் 110-விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட முதலமைச்சர், மாநிலத்தில் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தொகுதிப் பணிகளை மேற்கொள்ள அரசு சார்பில் புதிய கார்கள் மற்றும் காரைப் பராமரிப்பதற்காக மாதம்தோறும் ரூ.75,000 பராமரிப்புப்படி வழங்கப்படும் என அறிவித்தார்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்குத் திமுக உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மாநிலம் கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கும் சூழலில், எம்.எல்.ஏ-க்களுக்கு அரசுப் பணத்தில் சொகுசு கார்கள் வழங்குவது தேவையில்லாத செலவு என்றும், மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து, சட்டமன்றக் குழுவுக் கூட்டத்திற்குப் பின்னர் திமுகவைச் சேர்ந்த 59 சட்டமன்ற உறுப்பினர்களும் அரசு வழங்கும் காரையும் அதற்கான பராமரிப்புப் படியையும் தாங்கள் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும், அதனை நிராகரிப்பதாகவும் அறிவித்துள்ளனர். திமுகவுக்கு வேண்டாம் என்று தான் கூறுகிறோம் தவிர யாருக்கும் தர வேண்டாம் என்று கூறவில்லை என்று தெரிவத்தார் . மேலும் திமுகவை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் தளி ராமச்சந்திரனும் கார் வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாருக்கு தேவையோ அவர்களுக்கு மட்டும் கார் வழங்கலாம் என்று பாமக உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!