டில்லியைச் சேர்ந்த நிகில் மிஸ்ரா, 2023-ல் அந்தமானுக்குத் தேனிலவு சென்றபோது மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்து அவரைத் தாக்கி, கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றுள்ளார். பின்னர் வரதட்சணை கேட்டு அப்பெண்ணை வீட்டை விட்டு விரட்டியுள்ளனர். தற்போது கோரக்பூர் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
