Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆந்திரா பிரகாசம் -லிப்ட்டில் சிக்கி பெண் பலி!- சோகம்

ஆந்திரா பிரகாசம் -லிப்ட்டில் சிக்கி பெண் பலி!- சோகம்

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஓங்கோலில் வனிதா(55) என்ற பெண், லிப்ட்டில் தனது மகள் மற்றும் பேரனுடன் சென்றபோது லிப்ட்டின் கதவு மூடாமல் திடீரென கீழே இறங்கியத்தில் நடுவில் சிக்கி உயிரி*ந்தார்.

வனிதா தனது மகள் மற்றும் பேரனுடன் மின்தூக்கியில் ஏறியுள்ளார். மகளும் அவரது பேரனும் மின்தூக்கியில் இருந்து பத்திரமாக வெளியேறிய நிலையில், வனிதா வெளியே வரத் தயாரானபோது மின்தூக்கியின் கதவு திறந்தபடியே திடீரென கீழே நகரத் தொடங்கியுள்ளது. இதனால் அதிர்ந்து போன வனிதா, நகர்ந்து கொண்டிருந்த மின்தூக்கியிலிருந்து அவசரமாக வெளியேற முயன்றபோது சிக்கி படுகாயமடைந்தார்.

அங்கு கூடியிருந்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மின்தூக்கியின் கதவு திறந்த நிலையிலேயே அது திடீரென கீழே நகர்ந்ததால் நேரிட்ட இந்த விபத்து, கட்டிடங்களில் உள்ள மின்தூக்கிகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து மீண்டும் பல தீவிர கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

error: Content is protected !!