தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கு ரூ.755 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தங்கம் கொள்முதல் செய்வதற்கான டெண்டரில் பிரபல நகை நிறுவனமான ஜோய் ஆலுக்காஸ் வியக்கத்தக்க வகையில் ஒரு பைசா மட்டும் கோரி எல்.1 நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கத்தின் விலையைத் தவிர்த்து செய்கூலி, ஹால்மார்க், பேக்கிங், காப்பீடு, போக்குவரத்து உள்ளிட்ட கூடுதல் கட்டணங்கள் அனைத்தையும் சேர்த்து ஒரு பைசா மட்டுமே கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
