முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் நேர்காணல் ஒன்றில் தனது தாயார் குறித்து உருக்கமாக பேசியுள்ளார். “எனது வாழ்க்கையின் மிகப்பெரிய தூண் என் அம்மா. அவர் 24 மணி நேரமும் என்னைப் பற்றியும், என் தங்கையைப் பற்றியும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பார்” என அவர் தெரிவித்துள்ளார். தனது வாழ்க்கையில் தாயார் அளித்து வரும் ஆதரவு மற்றும் அக்கறை குறித்து ஜேசன் சஞ்சய் பகிர்ந்துகொண்ட இந்த கருத்து சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
