கரூரில் செயல்படும் சமூக நீதி விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சாப்பாடு களி போல் இருப்பதாக வீடியோ எடுத்து வெளியீடு – சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி கிராமத்தில் அரசு சமூக நீதி விடுதி செயல்பட்டு வருகிறது. இதில் தாந்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்த விடுதியில் மதிய சமைக்கும் அரிசி உணவு களி போல் இருப்பதாக குற்றம் சாட்டும் மாணவர்கள் அந்த சாப்பாட்டை பாத்திரத்தில் இருந்து கற்களை போல் தூக்கி அதில் பேடுகின்றனர். அவை உடையவில்லை இதை தான் தினமும் சாப்பிடுவதாக அவர்கள் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. சமூக நீதி துறை அமைச்சர் வன்னி அரசு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
