பஞ்சாபை சேர்ந்த குர்தீப் சிங் (28) என்ற இளைஞர், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பகுதி நேரமாக உணவு டெலிவரி செய்து வந்த நிலையில், மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். ரிட்ச்மவுண்ட் தெருவில் பைக்கில் சென்று கொண்டிருந்த அவரை வழிமறித்த மர்ம நபர், துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து நியூயார்க் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், குர்தீப்பின் உடலை தாயகம் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நியூயார்க்கில் துப்பாக்கி சூட்டில் இந்திய இளைஞர் உயிரிழப்பு
