Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவையில் கல்லூரி அருகே போதை மாத்திரை – கஞ்சா விற்ற தம்பதி கைது

கோவையில் கல்லூரி அருகே போதை மாத்திரை-கஞ்சா விற்ற தம்பதி கைது

கோவை: கல்லூரி அருகே போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்ற தம்பதி கைது செய்யப்பட்டனர். இருவரிடம் 1400 போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கோவையை அடுத்துள்ள கோவைபுதூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி அருகே, கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதை அடுத்து, குனியமுத்தூர் போலீசார் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின்போது, அங்கிருந்த ஒரு பெண் உட்பட இருவரைப் பிடித்துச் சோதனை செய்தபோது, அவர்களிடம் அதிகப்படியான போதை மாத்திரைகளும் கஞ்சாவும் இருந்தது தெரியவந்தது.

போலீசார் அவர்களை உடனடியாகக் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது, அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த சல்மான்கான் மற்றும் பாத்திமா என்பது தெரியவந்தது. தம்பதியரான இவர்கள் இருவருமே, கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவை விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து, அவர்களிடம் இருந்து 1,400 போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த போதை மாத்திரைகள் எங்கிருந்து வாங்கப்பட்டன என்பது குறித்துப் பல்வேறு கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பின்னர் அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்று கஞ்சா விற்பனை நடப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீசார் தொடர்ந்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

error: Content is protected !!