Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டில்லியில் வெளுத்து வாங்கும் கனமழை- முக்கிய சாலைகளில் வெள்ளப்பெருக்கு

டில்லியில் வெளுத்து வாங்கும் கனமழை- முக்கிய சாலைகளில் வெள்ளப்பெருக்கு

டில்லி: நாட்டின் தலைநகரான டெல்லியின் பல இடங்களில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், டெல்லியின் சில பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுத்துள்ளது. ரெட் அலெர்ட் விடுக்கப்பட்ட பகுதிகளில் இன்று மாலை வரை பலத்த மழை, இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் இந்த பகுதிகளில் மணிக்கு 15 மி.மீ-க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை மையமானது கிழக்கு டெல்லியில் மணிக்கு 15 மி.மீ-க்கும் அதிகமான கனமழை மற்றும் இடியுடன் கூடிய மின்னல் ஏற்படுவதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த பகுதியில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசவும் வாய்ப்புள்ளது என கூறியுள்ளது.

இதனிடையே பல மணி நேரமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதனால் டெல்லி நகரின் பல முக்கிய சாலைகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கிழக்கு டெல்லி, கிழக்கு டெல்லி, ஷாஹ்தாரா, மத்திய டெல்லி மற்றும் புது டெல்லி ஆகிய பகுதிகளில் மிக பலத்த மழையும், மேற்கு மற்றும் வடக்கு டெல்லியில் மிதமான மழையும் பதிவாகியுள்ளது.

தலைநகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால், கமலா நகர், கன்னாட் பிளேஸ், அசோக் நகர் மெட்ரோ நிலையம் மற்றும் பல இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் முக்கிய சாலைகளிலும் தெருக்களையும் வெள்ளம் சூழ்ந்தது. இதன் விளைவாகப் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டது.

error: Content is protected !!