ஆகஸ்ட் 26ம் தேதி நாளை மிலாடி நபி தினத்தினை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் (FL1) மூடப்பட்டிருக்கும், அதனுடன் இணைந்து இயங்கும் மதுக் கூடங்கள் FL2/FL3/FL3A/FL3AA & FL11 பார்களிலும் மதுபானம்

விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும். மேலும், அன்றைய தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தாயள் தெரிவித்துள்ளார்.
