Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டூவீலரில் இருந்து தவறி விழுந்து பெண் பலி- திருச்சி அருகே பரிதாபம்

டூவீலரிலிருந்து தவறி விழுந்து பெண் பலி-திருச்சி அருகே சோகம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை மருங்காபுரி டி. இடியப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மலையாண்டி.இவரது மனைவி தங்கமணி (வயது 45)
இவர் துவரங்குறிச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் சப்ளையராக பணியாற்றி வந்தார்.பின்னர் இரவு பணி முடிந்து அந்த வழியாக சென்ற ஒரு மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு ஏறிச் சென்றார். துவரங்குறிச்சி யாகபுரம் திவ்யா பேக்கரி அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் மயங்கி கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு தங்கமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி அவரது மகன் அழகர் கொடுத்த புகாரின் அடிப்படையில் துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதேபோன்று நவல்பட்டு காவல் நிலையத்துக்கு உட்பட்ட குண்டூர்
பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த பொன்மலை கொட்டப்பட்டு மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த விஜயபாபு( 45 )என்பவர் மயங்கி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து அவரது மனைவி துர்கா கொடுத்த புகாரின் அடிப்படையில் நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!