புதுக்கோட்டை: அறந்தாங்கியில் 800-க்கும் மேற்பட்ட வீடுகளை இடிப்பதைத் தடுத்து நிறுத்தக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100 ஆண்டுகளுக்கும் மேலாக பல தலைமுறைகளாக வசித்து வரும் வீடுகளை இடிக்கக் கூடாது என வலியுறுத்தி, கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
