கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே நிலத்தை ரூ.22 லட்சத்திற்கு விற்றுவிட்டு, அப்பணத்துடன் காதலனுடன் மனைவி வித்யாவை (30) சென்றுள்ளார். இதனை தொடர்ந்து கணவர் நாராயணசாமி (39), மனைவியை கல்லால் தாக்கிப் படுகொலை செய்தார். வங்கிக்கு வந்த வித்யாவிடம் சொத்து மற்றும் பணத்தைக் குழந்தைகள் பெயரில் எழுதி வைக்குமாறு கேட்டபோது ஏற்பட்ட தகராறில் இக்கொலை நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்திலேயே வித்யா உயிரிழந்த நிலையில், தேன்கனிக்கோட்டை போலீஸார் நாராயணசாமியைக் கைது செய்தனர்.
காதலனுடன் சென்ற மனைவி… அடித்துக்கொலை… கணவன் கைது
