Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிறுமி கர்ப்பம்… வாலிபர் போக்சோவில் கைது- திருச்சி க்ரைம்

சிறுமி கர்ப்பம்... வாலிபர் போக்சோவில் கைது- திருச்சி க்ரைம்

சிறுமியை காதலித்து திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர்- போக்சோ வழக்கு பாய்ந்தது

திருச்சி உறையூர் பாண்டமங்கலம் காவல்கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் மைதீன் (வயது 22) .
இவர் உறையூர் பகுதியைச் சேர்ந்த ஒரு 17 வயது சிறுமியை கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தார் பின்னர் ஆசை வார்த்தை கூறி கடந்த ஆண்டு ஜூலை 27ம் தேதி வேளாங்கண்ணிக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார். பின்னர் ஊருக்கு தெரியாமல் மைதீனும் அந்த சிறுமியும் அவரவர் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இதற்கிடையே மைதீன் அந்த சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்றும் வேறு பகுதியில் வைத்தும் உடலுறவு வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் அந்த சிறுமி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். சிறுமியின் உடலில் மாற்றங்கள் தென்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது பற்றி குழந்தைகள் நலக்குழுவில் புகார் அளித்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மைதீன் மீது போக்சோ உள்ளிட்ட பதிவுகளை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஓய்வு பெற்ற உதவி கமிஷனர் திடீர் சாவு

திருச்சி முத்தரசநல்லூர் ஆதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (70 ).
இவர் ரயில்வே பாதுகாப்பு படை உதவி போலீஸ் கமிஷனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் இரண்டு தினங்களுக்கு முன்பு அவருக்கு பல் வலி ஏற்பட்டது அதைத் தொடர்ந்து புத்தூர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு பல் மருத்துவரை பார்ப்பதற்காக சென்றார்.
பின்னர் நர்சுகள் அவரை அழைத்த போது அவர் இருக்கையிலேயே பேச்சு மூச்சு இல்லாமல் இருந்துள்ளார் பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு சந்திரசேகரன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர் இது குறித்து அவரது மனைவி சந்தியா கொடுத்த புகாரின் அடிப்படையில் உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலாளியிடம் ரூ 2 லட்சம் ஆன்லைன் மோசடி

திருச்சி ஏர்போர்ட் வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மலர்மன்னன் (வயது 42) இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது அதில் 5ஜி டவர் அமைப்பது தொடர்பான விளம்பரம் மற்றும் செல்போன் நம்பர் இருந்தது உடனே அவர் அந்த மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார் அப்போது எதிர்முனையில் பேசியவர் செல்போன் டவர் அமைக்க உங்களிடம் நிலம் உள்ளதா? என கேட்டுள்ளார் அதற்கு மலர்மன்னன் தனது மனைவி பெயரில் நிலம் திருச்சியில் உள்ளது என தெரிவித்தார் உடனே அந்த மர்ம நபர் நிலம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் வங்கி விவரங்களை அனுப்பி வைக்குமாறு தெரிவித்தார் பின்னர் செல்போன் நிறுவனம் மூலமாக ரூ 15 லட்சம் முன்பணமாக செலுத்த இருக்கிறோம் அதற்கு ஆவண கட்டணமாக ரூபாய் 2 லட்சம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர் இதனை நம்பிய மலர்மன்னன் அந்த மர்ம நபர் கொடுத்த வங்கி கணக்குக்கு பல்வேறு தவணைகளாக ரூபாய் 2,450 பணத்தை அனுப்பி வைத்தார் பின்னர் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட மலர்மன்னன் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார் இன்ஸ்பெக்டர் பாலுச்சாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கிரெடிட் கார்டை புதுப்பிப்பதாக கூறி ரூ.1 லட்சம் மோசடி

திருச்சி கிராப்பட்டி பாரதி நகர் கிரீன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம் (வயது 31 )இவர் ஒரு தனியார் வங்கியின் கிரெடிட் கார்டு வைத்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு வங்கி அதிகாரி பேசுகிறேன் உங்களுடைய கிரெடிட் கார்டை புதுப்பிக்க இருக்கிறோம் எனக் கூறியுள்ளார் அதைத் தொடர்ந்து அந்த மர்ம நபர் அனுப்பிய ஆப்பை ஓப்பன் செய்து அதில் கிரெடிட் கார்டு விவரங்களை அளித்தார் பின்னர் சில நிமிடங்கள் கழித்து அவருடைய வங்கி கணக்கை சோதனை செய்தபோது அதில் வைத்திருந்த ரூபாய் ஒரு லட்சத்து 2 ஆயிரம் பணத்தை அந்த மர்ம ஆசாமி ஆன்லைன் மூலமாக திருடியது தெரிய வந்தது பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து கொண்ட அப்துல் ரஹீம் இது பற்றி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!