நாமக்கல் பரமத்திவேலூரில் இன்று டிராக்டர் விற்பனை மையத்திற்குள் புகுந்து டெம்போ லாரி விபத்தில் சிக்கியது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, டிராக்டர் விற்பனை மையத்திற்குள் அதிவேகமாக மோதி உள்ளே புகுந்தது. மதுபோதையில் லாரியை இயக்கி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்தபோது, விற்பனை மைய பகுதியில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
